பல வருட பிரிவிற்கு பிறகு மீண்டும் இணையும் சீதா – பார்த்திபன் ஜோடி!

சீதா

தமிழ் சினிமாவில் பவ்யமான நடிகையாக ஒரு காலத்தில் பெயரெடுத்தவர் நடிகை சீதா. 1985-ம் ஆண்டு பாண்டியராஜன் பாண்டியன் நடிப்பில் வெளியான ஆண்பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

முதல் படமே ஆயிரம் பூக்கள் மலரட்டும், இவள் ஒரு பவுர்ணமி, சங்கர்குரு, குரு சிஷ்யன், உன்னால் முடியும் தம்பி, புதிய பாதை தங்கைக்கு ஒரு தாலாட்டு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் உடன் புதிய பாதை படத்தில் நடித்தபோது தனக்கு ஹீரோயினாக நடித்த சீதாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது புதிய பாதை படத்தை ரீமேக் செய்யவுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறினார்.அப்படத்தில் தானே நடிக்கவிருப்பதாகவும் கூறினார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்போதிருக்கும் பார்த்திபன் வயதுக்கும், உருவ அமைப்புக்கும் புதிய பாதை செட் ஆகுமா? என்று கேள்வி எழுப்பியதோடு இதில் சீதா கேரக்டரில் அவர் நடிப்பாரா என்றும் கேட்டுவருகின்றனர். அப்படி மட்டும் நடந்தால் இருவரும் மீண்டும் இணைவார்கள் என பேசிக்கொள்கிறார்கள்.