
தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் ஷாக்ஷி. தமிழில் ரியலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். 2013 ல் “ராஜா ராணி” என்ற திரைப்படத்தில் ஒரு சீனில் மட்டுமே நடித்து அதில் அறிமுகமானார்.
2014 ல் “மென் பொருள் காண்டா “என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார். அதன் பின் தமிழில் காலா, விசுவாசம், குட்டி கதை, நான் கடவுள் இல்லை, அரண்மனை 3 போன்ற படங்களில் சிறிய கதாப்பத்திரத்தில் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும் ஹீரோயின் சான்ஸ் இன்னும் வரவில்லை.
தற்போது புரவி, ஆயிரம் ஜென்மங்கள், அந்த இரவு, படங்களில் நடித்து வருகிறார். 120 மணிநேரம் என்ற ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது புகைப்படத்தைப் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.



