
நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…..
தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.2010 ”விண்ணைத்தாண்டி வருவாயா” என்ற படத்தின் மூலம் தெலுங்கில் கதா நாயகியாக அறிமுகமானார்.பின் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தார்.”பாணக்காத்தாடி” என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின் தளபதியுடன் கத்தி, தெறி, மெர்சல், சூர்யாவுடன் அஞ்சான்,24, தனுஷுடன் தங்கமகன், போன்ற பல படங்கள் தமிழில் நடித்துள்ளார்.கடைசியாகத் தமிழில் ”காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்துள்ளார்.நடிகை சமந்தா நடித்த யசோதா படம் தெலுங்கில் உருவாகி கடந்த நவம்பரில் வெளியானது.தற்போது அவர் நடித்த ”சகுந்தலா” படம் ஏப்ரல் 14 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் ரீலீஸாக உள்ளது.
இந்நிலையில் நடிகை சமந்தா ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளார்.”எனக்குத் தெரியும் இதை சொல்லும் இடத்தில் நான் இல்லை.இருந்தாலும் சொல்கிறேன் யாரையாவது டேட் செய்யுங்கள் ” இதற்குப் பதில் அளித்த சமந்தா ”நீங்கள் என்னை காதலிப்பது போல் வேறு யார் காதலிப்பார்கள்” என்று பதிலளித்து உள்ளார்.





