
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துப் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. 2017 ல் “அர்ஜுன் ரெட்டி” என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன் பின் 2018 ல் ‘மேரி நிம்மோ’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து மகாநதி, என்டிஆர் கதைநாயகுடு, 118, 100% காதல், உள்ளிட்ட பல படங்கள் தெலுங்கில் நடித்துள்ளார்.
2019 ல் ஜீவாவுடன் இணைந்து “கொரில்லா” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அமைதி என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் சுறு சுறுப்பாக இருக்கும் ஷாலினி தற்போது ஸ்லிம்மாக மாறி ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கிறார். இந்நிலையில் சிகப்பு நிற உடையில் கிளமராகப் போஸ் கொடுத்துள்ளார்.


