விஜய்யால் பட்ட அவமானம்…. பாலிவுட் சூப்பர் ஸ்டார் படத்தை ஓகே செய்த ஏ.ஆர்.முருகதாஸ்!

விஜய்யால் பட்ட அவமானம்…. பாலிவுட் சூப்பர் ஸ்டார் படத்தை ஓகே செய்த ஏ.ஆர்.முருகதாஸ்!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டு இருந்தவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் தீனா, ரமணா, கஜினி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை தமிழில் கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் இருந்தும் வாய்ப்ப அவருக்கு கிடைக்க தொடர்ந்து இரண்டு மொழி படங்களையும் இயக்கி வருகிறார்.

இந்தியிலும் உச்ச இயக்குனர் என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டார். கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்த போது அது இந்திய சினிமா அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. ரூ. 100 கோடி வசூல் செய்த அபார சாதனை படைத்தது. இதன் மூலம் ஏ.ஆர் முருகதாஸ் என்றாலே மிகப்பெரிய பிராண்ட் என்ற அளவுக்கு பாலிவுட்டிலும் பலம் பெற தொடங்கிவிட்டார்.

அதன் பிறகு ஏழாம் அறிவு படத்தை இயக்கி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் மிரள வைத்தார். அவரது ஒட்டுமொத்த சினிமாவையே வேக வைத்தது என்று சொல்லலாம். தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி திரைப்படம் அவருக்கு உச்சத்தை தொட்டது இப்படி அடுத்தடுத்த வெற்றி படங்களை எடுத்து ஏ ஆர் முருகதா சினிமாவில் ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டார். விஜயுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக தொடர்ந்து கத்தி, சர்க்கார் போன்ற படங்களை இயக்கினார்.

இப்படி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற இடத்தை தக்க வைத்திருந்த ஏ ஆர் முருகதாஸ் ரஜினியின் தர்பார் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்து பெரும் பிளாப் ஆகிவிட்டது. அந்த படம் பெரும் தோல்வி அடைந்ததால் வசூல் ரீதியாக பின்தங்கி தயாரிப்பு தரப்பிற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால் ஏ ஆர் முருகதாஸியின் மார்க்கெட் சரிந்து விட்டது.

இதனிடையே விஜய் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியது. இதன் பின்னர் முருகதாஸ் விஜய் படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் சம்பள விவகாரம் காரணமாக அதாவது தர்பார் படத்திலும் உங்களது தோல்வி தெரிந்துவிட்டது. உங்களுக்கு மார்க்கெட் இல்லை எனவே நீங்கள் கேட்கும் சம்பளம் இந்த படத்திற்கு கொடுக்க முடியாது என விஜய் படத்தைப் இயக்கவிருந்த தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர் அவமானம் செய்ததால் ஏ ஆர் முருகதாஸ் இந்த கதையை நான் இயக்க போவதில்லை தயவு செய்து விடுங்கள். வேறு யாராவது வைத்து படம் எடுத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.

இதைடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ருக்மணி வசூல் நடிக்கிறார்கள். இந்த படத்தை மிகப்பெரிய ஆக்சன் படமாக உருவாக்கி ஏ ஆர் முருகதாஸ் மிகப்பெரிய அளவில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் சிவகார்த்திகேயன் மூலமாக வெற்றி கொடுக்க காத்திருக்கும் சமயத்தில் அந்த வெற்றி அவருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்துவிட்டால் விஜய் போன்றவர்கள் வாய்மேல் விரல் வைப்பார்கள் என்கிறது கோலிவுட் சினிமா. அவர் தற்போது படத்தை இயக்க மும்முரம் காட்டி வருகிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் வைத்தும் ஒரு படத்தை இயக்க உள்ளாராம் ஏஆர் முருகதாஸ்.