
நடிகை கஜோலின் வைரலாகும் போட்டோஸ்….
90 களில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஜோல். ஷாருகானுடன் இணைந்து பாசிகர் என்ற படத்தில் அறிமுகமாகி பேமஸ் ஆனார். 90 காலகட்டத்தில் இருக்கும் முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்து வந்தார். அதன் பின் 1999 ல் நடிகர் “அஜய் தேவ்கனை” காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
தமிழில் மின்சாரா கனவு என்ற படத்தில் பிரபுதேவா மற்றும் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். பின் 2017 ல் தனுஷுடன் “விஐபி 2” ல் நடித்திருந்தார். பாலிவுட்டில் இறுதியாக “திரிபங்கா” என்ற படத்தில் நடித்திருந்தார். இது அண்மையில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது சமூக வலைத்தளங்களில் படு சுறு சுறுப்பாக இருக்கிறார். அடிக்கடி இன்ஸ்டாவில் தனது புகைப்படத்தைப் பகிர்ந்து இளசுகளை கவருகிறார். இந்நிலையில் கருப்பு நிற உடையில் கேஷுவலாகப் போஸ் கொடுத்துள்ளார்.


