
சமூகவலைத்தளத்தில் கவர்ச்சி குயினான ஷிவானி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவராக இருந்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே சின்னதிரையில் பகல் நிலவு’ சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியலில்களில் நடித்துள்ளார். பிக்பஸ் மூலம் கமல் ஹாசனுடன் ஏற்பட்ட அறிமுகத்தை வைத்து அவர் நடித்த நடித்த LCU இன் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.அடுத்து அவர் RJ பாலாஜியின் வீட்ல விசேஷம் திரைப்படம் மற்றும் வடிவேலுவின் மறுபிரவேசம் திரைப்படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகியவற்றில் துணை வேடங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் விஜய் சேதுபதியின் 46 திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமாக உள்ளார். பின்னர் அது DSP எனப் பெயரிடப்பட்டது.இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாகக் கவர்ச்சியான போட்டோக்களை பதிவேற்றம் செய்து வரும் ஷிவானி தற்போது சரஸ்வதி பூஜை தினத்தில் மிகவும் அழகாக ஹோம்லியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த அடக்கமான, அம்சமான அழகுக்கு அனைவரும் லைக்ஸ் குவித்துள்ளனர்.





