கருப்பு நிற பட்டாம் பூச்சியை பறக்க விட்டு ரசிகர்களை மிரட்டும் ஷிவானி…….

Spread the love
ஷிவானி

நடிகை ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் போட்டோஸ்…….

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் மூலம் சிறிய கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி. அதனை தொடர்ந்து அதே சேனலில் “பகல் நிலவு” என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின் கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் நடித்துள்ளார்.

அதன் பின் ஜீ தமிழில் “இரட்டை ரோஜா” என்ற தொடரில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதிலிருந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பிக் பாஸ்” சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டு இளசுகளை கவர்ந்தார். அதிலிருந்து வெளியேறியதும் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின் வடிவேலு நடித்த நாய் சேகர் படத்தில் நடித்துள்ளார். தற்போது சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி கிளாமர் போஸில் இளசுகளை மயக்குகிறார். அந்த வகையில் கருப்பு நிற உடையில் பட்டாம் பூச்சியை பறக்கவிட்டு இளசுகளின் மனதை வருடுகிறார்.