
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர் ஸ்ரேயா சரன். 2001 ல் “இஷ்டம்” என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 2003 ல் ஹிந்தியில் “துஜே மேரி கசம்” படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
பாலிவுட்டில் அறிமுகமான அதே ஆண்டில் தமிழில் “எனக்கு 20 உனக்கு 18” என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பின் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “மழை” படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து சிவாஜி, கந்தசாமி, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ்மகன், உள்ளிட்ட படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தார்.
சினிமாவிற்கு பிரேக் விட்டுத் திருமண வாழ்க்கையில் செட்டில் ஆன ஸ்ரேயா தற்போது இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படமான “மியூசிக் ஸ்கூல்” என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது கிளாமரில் கியூட்டாகப் போஸ் கொடுத்துள்ளார்.





