பிளாக் அண்ட் ஒயிட் சாரியில் சிம்பிள் போஸ் கொடுக்கும் ஷ்ருதிகா…

Spread the love
ஷ்ருதிகா

நடிகை ஷ்ருதிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்…

பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் ஷ்ருதிகா. சூர்யா நடிப்பில் வெளியான “ஸ்ரீ” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆல்பம், தித்திக்குதே, நள தமயந்தி, போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் என்ற மகனும் இருக்கிறார். திருமணம், குழந்தை என செட்டில் ஆன ஷ்ருதிகாவுக்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை நழுவ விடாமல் போட்டியில் வென்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது ‘கலக்க போவது யாரு’ சீசன் 4 ல் நடுவராக இருக்கிறார். சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். இந்நிலையில் குடும்பத்துடன் ஜெய்பூரை சுற்றும் ஷ்ருதிகா. பிளாக் அண்ட் ஒயிட் சீரியலில் போட்டோஸ் எடுத்து இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.