
தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான “ஸ்ரீ” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஆல்பம், தித்திக்குதே, நள தமயந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் பழம் பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். ஷ்ருதிகா அர்ஜுன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஆரவ் என்ற மகனும் உள்ளார். திருமணம், குழந்தையெனச் செட்டிலான இவருக்குக் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து அதில் வெற்றி பெற்றார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “கலக்க போவது யாரு” நிகழ்ச்சியில் நடிவராக இருக்கிறார். எப்போதும் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் கருப்பு நிற உடையில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.





