எங்களுக்குள் அது நடந்துச்சு… போட்டோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த அதிதி!

அதிதி

நடிகர் சித்தார்த் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் தான் முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து ஆயுத எழுத்து , காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என்.எச் 4 , தீயாய் வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவிய தலைவன் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

சித்தா என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றியை குவித்தார். இதனிடையே இவர் பிரபல நடிகையான அதிதி ராவ் உடன் ரகசியமாக பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். நேற்று திடீரென சித்தார்த் அதிதி ராவ் ஹைதாரியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக செய்தி வெளியாகி தீயாக பரவியது.

இவர்கள் இருவரும் தெலங்கானா மாநிலம், வனபர்தி மாவட்டம், ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோவிலில் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக டோலிவுட் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிதி அதை உறுதி ஆனால், நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்ததாக அவர் கையில் மோதிரத்துடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு செம ஷாக் கொடுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.