சென்செஷ்னல் ஜோடி….சித்தார்த்-அதிதி ராவ் இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்செஷ்னல் ஜோடி….சித்தார்த்-அதிதி ராவ் இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்திய சினிமாவில் தற்போதைய சென்சேஷனல் ஜோடியாக பார்க்கப்பட்டு வருபவர் தான் அதிதி மற்றும் சித்தார்த் இவர்கள் இருவரும் சேர்ந்து மகாசமுத்திரம் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் பின்னர் காதல் ஆக மாறியது .

இருவரும் ரகசியமாக பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பின்னர் சமீபத்தில் தான் தங்களது காதலை உறுதி செய்தனர். அது மட்டும் இல்லாமல் மிகவும் சிம்பிளான முறையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தங்களது மோதிர விரல்களை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு திருமணத்தை உறுதி செய்தனர்.

இருவரும் தற்போது திருமணத்திற்காக காத்திருக்கிறார்கள். சித்தார்த் பாய்ஸ் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதேபோல் அதிதி பல்வேறு ஹிந்தி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால். இவர்களின் சொத்து மதிப்பு விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதாவது நடிகர் சித்தார்த்தின் நிகர மதிப்பு சுமார் ரூ. 70 கோடி என்று கூறப்படுகிறது. அதிதி ராவின் சொத்து மதிப்பு ரூ.60 கோடி என கூறப்படுகிறது. சொத்து மதிப்பு ரூ. 130 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இவர்களின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.