பாலத்தை அப்படியே இடித்து தள்ளிய கண்டேனர் கப்பல் 21 பேரைக் காணவில்லை !

பாலத்தை அப்படியே இடித்து தள்ளிய கண்டேனர் கப்பல் 21 பேரைக் காணவில்லை !

அமெரிக்காவில் உள்ள பல்டிமோர் என்னும் நகரில், பாலத்தின் மேல் பயணித்துக் கொண்டு இருந்த பலர் பாம இடிந்து விழுந்ததால், கடும் குளிர் மற்றும் உறை நிலையில் இருந்த ஆற்றில் விழுந்துள்ளார்கள். இதுவரை 2 பேரை மட்டுமே மீட்க்க முடிந்ததாக பொலிசார் தெரிவித்துள்ள நிலையில் 21 பேரை காணவில்லை என்று பொலிசார் அறிவித்துள்ளார்கள். சற்று முன்னரே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.

பாலத்திற்கு கீழே சென்ற சிங்கப்பூர் கண்டேனர் ஒன்று, பாலத்தின் மையப் பகுதில் உள்ள தூண் ஒன்றை பலமாக தாக்கி அதனை வீழ்த்தியதால். பாலம் இடிந்துள்ளது என்பது CCTV கமரா மூலமாக தெரிகிறது. குறித்த சிங்கப்பூர் கப்பல் பாலத்தின் தூணில் மோதி அதனை இடித்துள்ளது. இதனால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது எனப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அதிர்வின் வாசகர்களுக்காக வீடியோ இணைப்பு.