பா.நெடுமாறன் வெளியிட்ட பிரபாகரன் தொடர்பான அறிக்கையால்…… கொதித்தெழுந்த சிங்கள அரசியல்வாதிகள்….. மேலும் பதற்றமான நிலமை!!!!

Spread the love

நேற்று தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பா.நெடுமாறன் தெரிவித்ததாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாகவும் அவர் வெளியில் வருவதற்கான காலம் மிக விரைவில் தோன்றும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரபாகரன் தற்போது எங்கு உள்ளாரென அறிவிக்க முடியாது எனவும், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இலங்கை அரசின் பொய்க்கான தகவலுக்கு முற்றுப்புள்ளி விரைவில் தெரியவரும் எனவும் இலங்கையில் ராஜபக்ஷ என்ற குடும்ப அரசியல் முடிவுக்கு வந்ததனால் எமது தலைவர் விரைவில் உதயமாகுவாரெனப் பா.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இவருடைய பேச்சினால் இலங்கையின் அரசியல்வாதிகளிடையே பெரும் அச்சத்தினையும் பதற்றத்தினையும் தோற்று வித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.