ஐயா என்னை மன்னிச்சிடுங்க..! இயக்குனரின் தேசிய விருதை திருப்பிக் கொடுத்த திருடன்!

ஐயா என்னை மன்னிச்சிடுங்க..! இயக்குனரின் தேசிய விருதை திருப்பிக் கொடுத்த திருடன்!

தமிழ் சினிமாவில் காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட எதார்த்தமான கதைகளங்களை கொண்ட படங்களை இயக்கியவர் மணிகண்டன். சமீபத்தில் மணிகண்டனின் மதுரை வீட்டில் நுழைந்த திருட்டுக் கும்பல் அவரது வீட்டில் இருந்த நகை, பணத்துடன், அவர் வாங்கிய தேசிய விருதுகளையும் திருடி சென்றது. இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அதை திருட்டு கும்பல் பார்த்திருக்க கூடும் என தெரிகிறது. அதனால் மணிகண்டன் வீட்டின் முன்பு ஒரு மன்னிப்பு கடிதத்துடன் அவரது தேசிய விருது பதக்கங்களை விட்டு சென்றுள்ளனர். அந்த கடிதத்தில் “ஐயா எங்களை மன்னித்துவிடுங்கள். உங்கள் உழைப்பு உங்களுக்கு..!” என்று எழுதப்பட்டுள்ளது.

தேசிய விருதுகளை திருட்டு கும்பல் திரும்ப கொடுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே சமயம் அந்த திருட்டு கும்பலை பிடிக்க போலீஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.