அட நம்ம ஷிவாங்கியா? ஆளே அடையாளம் தெரியாமல் செம ஸ்டைலா மாறிட்டாங்களே (வீடியோ)

அட நம்ம ஷிவாங்கியா? ஆளே அடையாளம் தெரியாமல் செம ஸ்டைலா மாறிட்டாங்களே (வீடியோ)

சூப்பர் சிங்கர் புகழ் ஷிவாங்கி கேரளாவை பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் பிறந்த வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். இவரது தாய் தந்த இருவருமே பிரபல பின்னணி பாடகர்களாக இருந்தார்கள். அதனால் இவருக்கு பாடலுக்கு பாடல் மீது உள்ள ஆருள் சிறுவயதிலிருந்து அதிகரித்துவிட்டது. இவரது குரல் பேசும் போது வேறு மாதிரியாகும் பாடும்போது குயில் போன்றும் இருந்ததாலே மக்களை வெகுவாக கவர்ந்தார்.

எல்லோருக்கும் இவரது குரல் மீது மிகுந்த ஆச்சரியமும் அலாதி பிரியமும் இருந்தது. குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் 2019ல் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இவரது பாடும் குரல் எல்லோருக்கும் மிகவும் பிடித்துப்போக அதேபோல் பேசும் குரல் மிகவும் காமெடியாக மிகவும் குழந்தைத்தனமாக இருந்தது.

இதனாலே வெகு சீக்கிரத்தில் மக்களின் மனதில் மிகவும் ஆழமான இடத்தைப் பிடித்து விட்டார். அதன் பின்னர் சிவாங்குக்கு குக் வித் கோமாளி நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது அந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவு பிரபலம் ஆனார்.

சுட்டித்தனமான சேட்டைகள் காமெடியான டைமிங் காமெடிகள் உள்ளிட்டவை மக்களை வேகமாக கவர்ந்தது. இதனை அடுத்து அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது. ஆம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தில் சிவாங்கி முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்து வருகிறது. இதனிடையே கச்சேரிகளுக்கு சென்று பாடல்களையும் பாடி வருகிறார். கிடைக்கும் பாட வாய்ப்புகளிலும் நடித்துக் கொண்டே படங்களுக்கும் பாடல் பாடி வருகிறார்.

தொடர்ந்து பிரபலமாக இருந்து வரும் சிவாங்கி தற்போது சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. நாம் ஷிவாங்கியா இது? என ரசிகர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு தற்போது மிகவும் ஸ்டைலாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போய் அவர் வெளியிட்டுள்ள புதிய ஹேர் ஸ்டைல் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ: