சிவாங்கிக்கு கல்யாணமா? காட்டுத்தீயாய் பரவும் அவரே போட்ட பதிவு!

சிவாங்கிக்கு கல்யாணமா? காட்டுத்தீயாய் பரவும் அவரே போட்ட பதிவு!

பிரபல பாடகியும், இளம் காமெடி நடிகையுமான ஷிவாங்கி விஜய் தொலைக்காட்சியில் 2019ல் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இருக்கு பாடும்போது ஒரு குரலும், பேசும்போது ஒரு குரலும் கடவுள் இயற்கையிலே கொடுத்துள்ளார்.

அது அனைவரையும் வியந்து பார்த்து வியக்கவைத்தது.இதனாலே வெகு சீக்கிரத்தில் மக்களின் மனதில் மிகவும் ஆழமான இடத்தைப் பிடித்து விட்டார். அதன் பின்னர் சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் ஆனார்.

பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தில் சிவாங்கி முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார். இதனிடையே கச்சேரிகளுக்கு சென்று பாடல்களையும் பாடி வருகிறார்.

இந்நிலையில், “சோசியல் மீடியாவை திறந்தாலே யாருக்காவது திருமணம் முடிந்திருக்கிறது, இல்லை நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது அல்லது கர்ப்பமாக இருப்பதாக பதிவிடுகிறார்கள். நானும் தற்போது அந்த ஒரு கட்டத்தில் தான் இருக்கிறேன்” என கூறியுள்ளார்.. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அப்போ உங்களுக்கும் விரைவில் திருமணமா என செம குஷியில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.