உக்ரைன் நாட்டின் கிவ் பகுதியில் 16 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதில் அன் நாட்டின் முக்கிய மந்திரி ஒருவரும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகொப்டர் விபத்தில் மந்திரியும் அவருடன் பயணித்த சிலரும் இறந்த அதேவேளை. ஹெலி குடியிருப்பு பகுதி மீது விழுந்ததால்..
மேலும் சிலர் மரணித்துள்ளார்கள் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை ரஷ்ய ராணுவ வீரர்கள் தாக்கவில்லை என்பது உறுதிசெய்யபப்ட்டுள்ளதோடு. எந்திரக் கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டது என உக்ரைன் அறிவித்துள்ளது. இருப்பினும் , ரஷ்யா தனது தாக்குதலில் தான் ஹெலி வீழுந்தது என்பது போன்ற தகவலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.