அவதூறாகவும் மிரட்டல் விடுத்தும் பேசிய…. திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சட்ட நடவடிக்கை!!!

இந்த செய்தியை பகிர

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விருகம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொன்டு பேசும்போது ஆளுநரை அவதூறாகவும் மிரட்டல் விடும் வகையிலும் பேசியதால் அவர்மீது சட்டநடிவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஆளுநர் மாளிகை துணைச் செயலாளர் பிரசன்னா ராமசாமி இன்று காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்துள்ளார்.

அதாவது இந்திய நாட்டின் குடியரசு தலைவரையோ, ஒரு மாநிலத்தின் ஆளுநரையோ அவரது செயற்பாட்டினை மேற்கொள்ள விடாமல் தடுத்தல் மற்றும் அவர்களுக்கு மிரட்டல் விடுத்தல் போன்றவற்றிக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 இன் படி வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை பகிர