உல்லாசமாக ஊரைச் சுற்றும் சின்னத்திரை நயன்தாரா

Spread the love

நடிகை வாணிபோஜனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….

2010 ல் ”திகில்” என்ற திரைப்படத்தின் மூலம் சிறிய வேடத்தில் நடிகையாக அறிமுகமானார். பின் 2012 ல் ‘அதிகாரம் 79’ என்ற படத்தில் துணை வேடத்தில் நடித்தார். விஜய் டிவியில் ஆஹா மற்றும் ஜெயா டிவியில் ”மாயா” என்ற சீரியலில் நடித்துள்ளார். இதன்பின் 2013 ல் சன் டிவியில் ஒளிபரப்பான ”தெய்வமகள்” என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்தார். இந்தச் சீரியல் வாணிபோஜனுக்கு மிகப்பெரும் வெற்றியை ஏற்படுத்தியது. இதன்மூலம் கலாட்டா விருது, நட்சத்திர விருது, தமிழ்நாடு மாநில விருது, போன்ற விருதுகள் பெற்றுள்ளார்.

ஜீத்தமிழ் சுரேஷ் இயக்கத்தில் ”லட்சுமி வந்தாச்சு” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். பின் தொடர்ந்து ஓ மைக்கடவுளே, பூட்டு, ராமே ஆண்டாளும் இராவணன் ஆண்டாளும், 2022 ல் ”மகான்” நடித்துள்ளார். தற்போது சில படங்களில் பாடபுடிப்புகளில் உள்ளார். இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ் ”செங்கலன்” படத்தில் கலையரசன் வணிபோஜன் இணைந்து நடித்துள்ளனர் இது ஜீ 5 ல் வெளியாகியுள்ளது.

தற்போது அவருக்குச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் ஏதுவும் இல்லை. இந்நிலையில் இந்தோனேஷியாவில் பயணம் மேற்கொண்ட வாணிபோஜன் அங்கு எடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவுசெய்துள்ளார்.