“சமவுரிமையை வெல்வோம், இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்” – இந்த அனல் பறக்கும் முழக்கங்களுடன் மன்னார் நகரில் இன்று பெரும் மக்கள் எழுச்சி!
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டும், அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராகவும், கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரியும், “சம உரிமை இயக்கம்” முன்னெடுத்த மாபெரும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் நேற்றைய தினம் மன்னார் நகரை கலக்கியது.
நேற்றைய தினம் காலையில் தொடங்கிய இந்தப் போராட்டத்தில், மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு கையெழுத்து இட்டுள்ளனர். மக்களின் உணர்வலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து காணப்பட்டன.
இலங்கையில் இனவாதத்திற்கும், அடக்குமுறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். இதேபோன்ற ஒரு கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் நேற்று முன்தினம் கிளிநொச்சியிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நீதி கேட்டு எழுந்து நிற்கும் இந்த நிலையில், மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்குமா அல்லது போராட்டங்கள் மேலும் தீவிரமடையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!