Posted in

தாடைகள் உடைந்து, மண்டை வெடித்து எலும்பு முறிவுகளோடு இருக்கும் செம்மணி எச்சங்கள் !

அங்கே என்ன கொடுமை எல்லாம் நடந்திருக்குமோ ? சிறு பிள்ளைகளுக்கு முன்னால் அவர்களது பெற்றோர்கள் முன்பாக இலங்கை ராணுவம் எப்படி இவர்களை அடித்து கொலை செய்துள்ளதோ தெரியவில்லை. காரணம் கண்டு பிடிக்கப்படும் மனித எச்சங்களில், முறிவு தறிவு உள்ள எலும்புகளே அதிகமாக இருப்பதாக, அகழ்வு மேற்கொள்ளும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மண்டை ஓடு வெடித்த நிலையில் சில எலும்புகள், கை கால் முறிவடைந்த நிலையில் சில எலும்புகள் என கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது. முதலில் 35 மனித எச்சங்கள் என்றார்கள். ஆனால் தோண்டத் தோண்ட வந்துகொண்டே இருக்கிறது. தற்போது வரை 47 மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில். 44 மனித எச்சங்களை மட்டுமே வெளியே எடுத்துள்ளார்கள். மேலும் 3 மனித எலும்புக் கூடுகளை தோண்டி எடுக்க வேண்டி உள்ளது.

அதனை தோண்டும் வேளை அருகே மேலும் எலும்புக் கூடுகள் கிடைக்க கூடும் என்று கூறப்படுகிறது. இதேவேளை இந்த புதை குழி தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்ற குரல் ஓங்கி ஒலித்த வண்ணம் இருக்கிறது. ஆனால் சிங்களப் பகுதியில் எதுவுமே நடக்காதது போல நிலமை மிகவும் சுமூகமாக இருக்கிறது. சிங்களப் பகுதிகளில் உள்ள எந்த ஒரு தொலைக் காட்சியும் இது தொடர்பாக ஒரு துளி செய்தியை இன்றுவரை வெளியிடவில்லை.

இதில் அனுரா அனுதாபிகள், என்று தங்களை கூறிக் கொள்ளும் தமிழர்கள் எதுவுமே பேசவில்லை வாய் அடைத்துப் போய் நிற்கிறார்கள். நல்லாட்சி நாங்கள் தமிழர்களின் நண்பன் என்று கூறிய அனுரா தற்போது எதுவுமே நடக்காதது போல இருக்கிறார். கேட்டால் இது பழைய கதை என்பார்கள். மேலும் ஒரு காடையர் கூட்டம், புலிகளின் புதை குழி பற்றி விசாரிக்க வேண்டும் என்று சிங்கள துதி பாடுகிறது.