முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு’ (VIDEO)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு’ (VIDEO)

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு’

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு தனிப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்துக்காக 10 பேர் கொண்ட குழுவினருடன் அரசுக்குச் சொந்தமான 16.6 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்டார். கோட்டை நீதிவான் நிலுப்புலி லங்காபுர (Nilupuli Lankapura), அவரை ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிட்டார்.

காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் இந்த விளக்கமறியல் உத்தரவு, அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

“அதிரடிப்படையினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்: கோட்டை நீதிவான் நீதிமன்றம் அருகே பதற்றம்” 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட செய்தியை அடுத்து, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு வெளியே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள செய்தி பரவியதையடுத்து, நீதிமன்றத்திற்கு வெளியே குழுமியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

நிலைமையைக் கட்டுப்படுத்த நீதிமன்றத்திற்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், மேலதிக பொலிஸ் குழுக்களும் வரவழைக்கப்பட்டன.