யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியில் இருந்து (ஆகஸ்ட் 6, 2025) ஒரு சிசுவின் எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ். நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் இந்த அகழ்வுப் பணிகள் நடைபெற்றன.
கடந்த 41 நாட்களாக கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு வரும் அகழ்வுப் பணியின் மூலம், இதுவரை 147 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 133 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சிறுவர்கள் மற்றும் சிசுக்களின் எலும்புக்கூடுகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 16 நாட்களாக நடந்த இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வுப் பணிகள் புதன்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் மீண்டும் ஆகஸ்ட் 21 அன்று தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செம்மணி புதைகுழியில் இருந்து தொடர்ந்து எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுவது, அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.