துப்பாக்கிச்சூடு சம்பவம்: கொழும்பில் ஐவர் காயம்!

துப்பாக்கிச்சூடு சம்பவம்: கொழும்பில் ஐவர் காயம்!

கொழும்பு, பொரளைப் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 07) இரவு 8.40 மணியளவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொரளை, சஹஸ்ரபுரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகே நடந்த இச்சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தற்போதைய நிலை குறித்து விரிவான தகவல்கள் வெளியாகவில்லை.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் டி56 ரக துப்பாக்கியால் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு அவர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.