இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது! நாடளாவிய ரீதியில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருள் பிடியில் சிக்கித் தவிப்பதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அதிர்ச்சி தகவல், சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அரசு, போதைக்கு அடிமையானவர்களை மீட்க அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சுஜித் கொத்தலாவல, 4 புதிய புனர்வாழ்வு மையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
குறிப்பாக, 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான சிறப்பு புனர்வாழ்வு மையம் பேராதனை பகுதியில் அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
குருணாகல், மாத்தறை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலும் புதிய மையங்கள் நிறுவப்பட உள்ளன.
“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என சுஜித் கொத்தலாவல தெரிவித்துள்ளார். மேலும், இந்த வேலைத்திட்டத்திற்காக வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகவும் 250 மில்லியன் ரூபா நிதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரம்மாண்ட நிதி ஒதுக்கீடும், புதிய மையங்களின் திறப்பும், போதைப்பொருள் பிடியில் சிக்கித் தவிக்கும் 3 லட்சம் பேரின் வாழ்க்கையில் ஒளியேற்றுமா? இலங்கையை அச்சுறுத்தும் இந்த போதைப்பொருள் சவாலை அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.