Posted in

சர்வதேச வலையில் சிக்கிய பாதாள உலக தாதாக்கள்!

இலங்கையின் நிழல் உலக தாதாக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி! சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத செயல்களுக்காக கருப்புப் பட்டியலில் இடம்பெற்ற இந்த தாதாக்கள், ரஷ்யா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவர்களை கைது செய்ய இலங்கை அரசாங்கம் எடுத்த தொடர்ச்சியான முயற்சிகளின் பலனாகவே இது சாத்தியமாகியுள்ளது. விரைவில் சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, இந்த கும்பல் உறுப்பினர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றாலும், பாதாள உலக தாதாக்களை வேட்டையாடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், நிழல் உலகமே நடுங்கிப் போயுள்ளது.

Loading