303 பேரை வியட்நாமில் இருந்து ஏற்றிய ஏஜன்சி இவர் தான்.. வியட்நாம் ராணுவம் சப்போட் இருந்தது ?

இந்த செய்தியை பகிர

சினிமா படம் ஒன்றில் துபாய்க்கு கப்பலில் கூட்டிச் செல்வதாக கூறி, பார்த்திபனை மும்பாயில் கொண்டு போய் இறக்குவார்கள். அது போல இலங்கை முழுவதிலும் 4 ஆட்களை வைத்து, தலா 20 லட்சம் வாங்கிக் கொண்டு 303 பேரை வியட்நாமுக்கு கூட்டிச் சென்றுள்ளார் இந்த நபர். அதிலும் சொகுசுக் கப்பல், கப்பலில் தேவையான உணவும் பிஃரீசரில் உள்ளது. எடுத்து சூடாக்கிச் சாப்பிட முடியும். 10 நாட்களில் கனவில் இருப்பீர்கள் என்பதே இன் நபரின் வாக்குறுதி. இதனை நம்பிய தமிழர்கள் விமானம் மூலம் வியட்நாம் சென்றுள்ளார்கள்.

வெறும் 50 பேர் மட்டுமே செல்கிறீர்கள் என்று சொன்னார்கள்.ஆனால் அங்கே சென்றால் 303 பேர் இருந்துள்ளார்கள். இதில் பவுன்சர்கள் வேறு. அதாவது ஏஜன்சியின் அடியாட்கள் 5 பேர் இந்தக் கப்பலில் இருந்துள்ளார்கள். கப்பலில் பிரச்சனை செய்த ஆட்களை அவர்களே அடித்தும் பயமுறுத்தியும் உள்ளார்கள். வியட்நாமில் தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. அதனைப் பயன்படுத்திய இன் நபர், வியட்நாம் ராணுவத்தின் உதவியோடு இவர்களை கப்பலில் ஏற்றி அனுப்புவது போல அனுப்பி. பின்னர் அன் நாட்டு கப்பல் படையை வைத்து, கப்பலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்துள்ள விடையம் அம்பலமாகியுள்ளது.

என்ன கொடுமை சரவணா. தற்போது இந்த 303 பேரில் 141 பேர் மீண்டும் இலங்கை திரும்பியுள்ள நிலையில். பலர் எமது செய்தி சேவைக்கு பல தகவல்களை சொல்லியுள்ளார்கள்.சுமார் 60 கோடி இலங்கை ரூபாவை வெறும் 4 மாதத்தில் சம்பாதித்துள்ளார்கள். தமிழர் தலையில் தமிழர்களே மிளகாய் அரைத்துள்ள விடையம் தான், வேதனையானது


இந்த செய்தியை பகிர