சிம்பிளா கத்தியை எடுத்து குத்திவிட்டு செல்லும் இளைஞர் Beckenham என்றாலே படு பயங்கரம் தான் !

சிம்பிளா கத்தியை எடுத்து குத்திவிட்டு செல்லும் இளைஞர் Beckenham என்றாலே படு பயங்கரம் தான் !

லண்டனில் சில நகரங்கள் உள்ளது, சும்மா பேரைக் கேட்டாலே அதிரும். புரொம்பிளி, குறைடன், பெக்கம், பிரிக்ஸ்டன், ரூட்டிங் இது போன்ற நகரங்களில் ஏதாவது ஒரு கொலை, இல்லையென்றால் கத்திக் குத்து சம்பவம் நடந்த வண்ணம் இருக்கும். நேற்றைய தினம் பெக்கம் பகுதியில், ஜாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த வெறும் 19 வயது இளைஞர், மற்றுமொரு நபரைக் குத்திவிட்டு, எந்த ஒரு பதற்றமும் இன்றி சாவகாசமாக ரயிலில் இருந்து இறங்கிச் செல்கிறார்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் பீதியில் அலறுகிறார்கள், ஆனால் குறித்த இளைஞர் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் செல்கிறான். இவை அனைத்துமே CCTV கமராவில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில். நேற்று மாலை தொடக்கம், இன்று அதிகாலை வரை பலவேறு கோணத்தில் ஆராய்ந்த பொலிசார் இறுதியாக இளைஞரை அடையாளம் கண்டு பிடித்து சற்று முன்னர் (11.49) மதியம் அவனைக் கைதுசெய்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது.

கத்திக் குத்துக்கு அளான இளைஞர் 20 வயது நபர் என்றும், அவர் இன்னும் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இந்தச் சம்பவம் ஏன் இடம்பெற்றது, இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக பொலிசார் மேலும் தீவிர விசாரனை நடத்தி வருகிறார்கள்.