புதிய மருத்துவமனை கட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினி?

புதிய மருத்துவமனை கட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் லால் சலாம் படம் சமீபத்தில் வெளியானது. தற்போது லைகா நிறுவனம் தயாரிப்பில், ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், புதிய சொத்தை ரஜினிகாந்த் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் புதிதாக சொத்து வாங்கியுள்ளதாகவும், அது பொதுமக்களுக்கு உதவும் வகையில், இருக்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே திருமண்டம், ஆசிரமம் என்று வைத்திருக்கும் ரஜினி, மக்களின் பயன்பாட்டிற்காக புதிய மருத்துவமனை ஒன்று கட்டவுள்ளதாகவும், அது பொதுமக்களுக்கும் உதவும் வகையில் இருக்கும் என தகவல் வெளியாகிறது.

விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என தெரிகிறது.

தமிழக மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இப்படி செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சொத்தை பதிவு செய்ய வேண்டி அவர் பத்திரப்பதிவு அலுவலத்திற்கு நேரில் சென்ற்தாக தகவல் வெளியாகிறது.