சூர்யாவின் வளர்ச்சி வியப்பளிக்கிறது- இயக்குனர் அமீர்

சூர்யாவின் வளர்ச்சி வியப்பளிக்கிறது- இயக்குனர் அமீர்

சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் அமீர் இயக்கத்தில், கார்த்தி ஹீரோவாக அறிமுகமான படம் பருத்திவீரன்.

இப்படம் வெளியாகி வெற்றி பெற்றாலும், இப்படத்தின் இயக்குனருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சமீபத்தில் பருத்திவீரன் பட விவகாரம் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், அமீருக்கு எதிராக தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா குற்றச்சாட்டு கூறினார். இதனால் அமீரின் நண்பர்களும், இயக்குனர்களுமான சசிகுமார், சமுத்திரகனி ஆகியோர் இப்படத்தின் தொடக்கம் முதலே அமீருடன் இணைந்து பணியாற்றியதால் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து கடிதம் வெளியிட்டனர்.

இந்த நிலையில், கலைப்புலி தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வாடிவாசல் படத்தில் சூர்யாவுடன் நடித்து வருவது பற்றி அமீர் மனம் திறந்துள்ளார்.

அதில், வாடிவாசல் படத்தில் எனக்கு முக்கிய வேடத்தை கொடுத்துள்ளார். படம் முழுவதும் எனக்கு சூர்யாவுடன் நிறைய காம்பினேசன் காட்சிகள் உள்ளது. சூர்யாவின் வளர்ச்சி வியப்பளிக்கிறது. மேலும் அவருடன் நடிக்க காத்திருக்கிறேன். அவர் நடிப்பில் எனக்கு சீனியர்….என்று தெரிவித்துள்ளார்