அஜித்தை நலம் விசாரித்த த.வெ.க தலைவர் விஜய்!

அஜித்தை நலம் விசாரித்த த.வெ.க தலைவர் விஜய்!

“அவருக்கு இதயம் மற்றும் நரம்பியல் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்ட போது, காதுக்குக் கீழ் மூளைக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருந்தது தெரியவந்ததை அடுத்து, அவர் உடனே அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து, அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். அதேபோல் மருத்துவமனை நிர்வாகமும் தெளிவான விளக்கம் அளித்திருந்தது.

எனவே நடிகர் அஜித்குமார் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என சக நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ”இன்று காலை அஜித் மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளதாகவும் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அடுத்த வாரம் கலந்துகொள்வார் ”என்று சுரேஷ் சந்திரா கூறினார். இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய், நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதே தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகிறது.