10 வருட டேட்டிங்… காதலனை கரம்பிடிக்கப்போகும் டாப்ஸி – திருமணம் எப்போ தெரியுமா?

10 வருட டேட்டிங்… காதலனை கரம்பிடிக்கப்போகும் டாப்ஸி – திருமணம் எப்போ தெரியுமா?

பஞ்சாபி பெண்ணான நடிகை டாப்ஸி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் முதன் முதலில் கடந்த 2010ல் வெளிவந்த சிம்மாண்டி நாதம் என்று தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் திரைத்துறையில் நுழைந்தார். அதை எடுத்து தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதனிடையே இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி அங்கு தொடர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பாலிவுட்டில் வலம் வரத் தொடங்கினார். இதனிடையே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்த வருகிறார். இவருக்கு தமிழில் ஆடுகளம் திரைப்படம் மிக முக்கிய படமாகவும் நல்ல அறிமுகத்தையும் நல்ல பிரபலத்தையும் கொடுத்தது.

அந்த படத்தில் ஆங்கிலேய பெண்ணாக தனுஷ் உடன் காதல் வழங்கப்படும் காட்சிகள், தத்தி தத்தி தமிழ் பேசி தனுஷின் காதலியாக பவ்யமாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று பார்த்த சமயத்தில் அவர் காஞ்சனா, ஆரம்பம் அனபெல் சேதுபதி, வை ராஜா வை, கதை திரைக்கதை இயக்கம் வசனம் உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு பாலிவுட்டிற்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.

தொடர்ந்து வெப் சீரிஸில் நடித்து வரும் டாப்ஸி இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி சமூக வலைதளங்களில் அண்மையில் தீயாய் பரவியது. இவர் 10 வருடமாக ஒருவரை காதலித்து வந்ததாகவும் இதுவரை அது பெரிதாக வெளியில் தெரியவில்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்பட்டது.

Mathias Boe-வுடன் கடந்த 10 வருடமாக தான் டேட்டிங் செய்து காதலில் இருந்துள்ளார் டாப்ஸி. இந்நிலையில் தற்போது இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்களாம் இந்த மாதம் இறுதிக்குள் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்கள் பெற்றோர்கள். இவர்களுடைய திருமணம் விரைவில் நடைபெறும் என்றும் திரையுலக நட்சத்திரங்களுக்கு அழைப்பே இல்லை என்றும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு குடும்பத்தாரின் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ளபோகும் இத்திருமணம் மிகவும் சிம்பிளான முறையில் நடக்க உள்ளதாக டாப்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.