லண்டனில் அஞ்சு என்ற பெண்ணைக் கொலை செய்த சுஜூ செவ்வேள்- காரணத்தை தேடும் பொலிசார்

இந்த செய்தியை பகிர

பிரித்தானியாவில் சுஜூ செவ்வேள் என்ற 52 வயது நபர்,  அஞ்சு என்ற பெண்ணையும் , மற்றும் அவரது 2 பிள்ளைகளையும்  கொலை செய்துள்ளார். நொத்- ஹாம்டன் அருகே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் வசித்து வந்த வீட்டில் கூக்குரம் கேட்டத்தை அடுத்து, அயலவர்கள் பொலிசாருக்கு அழைப்பை விடுத்துள்ளார்கள். விரைந்து சென்ற பொலிசார் அங்கே அஞ்சு என்ற பெண் பல வெட்டுக் காயங்களோடு இருப்பதையும்.

அவர்களின் 2 பிள்ளைகளும் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதையும் கண்டு. உடனடியாக மூவரையும் வைத்தியசாலையில் அனுமதித்தார்கள். ஆனால் அவர்கள் மூவரும் சிறிது நேரத்தில் இறந்து விட்டார்கள். சுஜூ செவ்வேளை, பொலிசார் கைது செய்து, 3 கொலைக் குற்றங்களை சுமத்தி நீதிமன்றில் நிறுத்தியுள்ளதாக அறியப்படுகிறது.

கடந்த விழாயக் கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். கொலைக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக அவர்கள் மேலும் ஆராய்ந்து வருகிறார்கள்.

 


இந்த செய்தியை பகிர