லண்டனில் தமிழ் அம்மா ஒருவர் தனது 2 பிள்ளைகளை கொலை செய்ய முயன்றுள்ளார் ?

இந்த செய்தியை பகிர

பிரித்தானியாவில் லண்டனுக்கு வெளியே, லின்கொலின் ஷியார் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடை ஒன்றை வைத்திருக்கும் தமிழ் குடும்பம் ஒன்று அங்கே வாழ்ந்து வந்த நிலையில். நேற்றைய தினம் திடீர் கூக்குரல் கேட்டதை அடுத்து. அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள். குறித்த தாய் தனது 2 ஆண் பிள்ளைகளை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளதோடு. மேலும் அவர்களை தாக்க முற்பட்டுள்ளார்.

இதனை அடுத்து அங்கே வந்த பொலிசார், பேசி சமாதானப்படுத்த முனைந்துள்ளார்கள். இருப்பினும் குறித்த தாய் கேட்டபாடாக இல்லை. இதனை அடுத்து பொலிசார் “”டீசர்”” எனப்படும் , மின்சார துப்பாக்கியை பாவித்து சுட்டுள்ளார்கள். இதனால் மின்சாரம் தாக்கி அந்த தாய் நிலத்தில் வீழ்ந்தார். 2 ஆண் பிள்ளைகளை மீட்ட பொலிசார் அவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். இரண்டு பிள்ளைகளுக்கும் உயிராபத்து இல்லை எனப் பொலிசார் தெரிவித்துள்ள நிலையில்.

அந்த வீட்டில் ஒரு தமிழ் குடும்பமே வாழ்ந்து வந்ததாக, அருகாமையில் வசிக்கும்,  தமிழ் இளைஞர் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்து உள்ளார். Friskney, Lincolnshire என்ற இடத்திலேயே இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இவர்கள் உண்மையில் தமிழ் குடும்பம் தானா ? இல்லை இந்தியர்களா என சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை. 

 


இந்த செய்தியை பகிர