Posted in

இலைக் கட்சியில் ‘மார்கழி’ பூகம்பம்! உள்குத்து… உளவாளி… ரகசியப் பண்ணை வீட்டுப் பட்டியல்!

இலைக் கட்சியில் ‘மார்கழி‘ பூகம்பம்! உள்குத்து… உளவாளி… ரகசியப் பண்ணை வீட்டுப் பட்டியல்!

அரசியல் வட்டாரமே அதிரப்போகும் பகீர் தகவல்! இலைக் கட்சியில் சீட் விவகாரம் இப்போது வெறும் சலசலப்பல்ல, பெரும் சூறாவளியாக மாறியிருக்கிறது. “விருப்ப மனு” என்பது வெறும் கண்துடைப்பா? பின்னணியில் நடப்பது என்ன? இதோ அதிரடித் தகவல்கள்!

பண்ணை வீட்டில் முடிந்த ரகசிய டீல்!

யாருக்கு சீட்? யாருக்கு வேட்டு? என்பது குறித்து முக்கியப் புள்ளியின் பண்ணை வீட்டில் வைத்து, ‘பேச வேண்டிய’ விதத்தில் பேசி, சீட் பட்டியல் பக்காவாகத் தயார் செய்யப்பட்டுவிட்டதாம்! ஆனால், வெளி உலகுக்கு ஜனநாயகத்தைக் காட்ட “விருப்ப மனு” நாடகம் அரங்கேறுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மார்கழி ‘சென்டிமென்ட்’ – கொந்தளிக்கும் நிர்வாகிகள்!

விருப்ப மனு கொடுக்க 9 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் ஒரு ட்விஸ்ட்!

  • முதல் நாள் மட்டும்தான் முகூர்த்த நாளாம்!

  • மீதமுள்ள எட்டு நாட்களும் சாஸ்திரப்படி தவிர்க்கப்பட வேண்டிய மார்கழி மாதத்தில் வருகிறது.

“234 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் எப்படி மனு கொடுக்க முடியும்? நாள், கிழமை பார்த்து அரசியல் செய்யும் நம் கட்சியில், இப்படி மார்கழியில் போய் மனு வாங்கலாமா?” என்று கட்சியின் சீனியர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

அம்மா காலத்துல இப்படி இல்லையே!”

“நாத்திகம் பேசும் ‘ஆலயக் கட்சி’யே வாஸ்து பார்த்து கொடிக்கம்பம் நடுவதும், தலைவர் அறையை மாற்றுவதுமாக இருக்கும்போது, சாஸ்திரத்தைச் சிரம் மேல் தாங்கும் நம் கட்சியில் இப்படி ஒரு குளறுபடியா?” என ரத்தத்தின் ரத்தங்கள் குமுறுகிறார்கள்.

“அம்மா இருந்தப்ப, விருப்ப மனு தேதி அறிவிச்சா அதுல குறைஞ்சது மூணு நாளாவது முகூர்த்த நாள் இருக்கும். ஆனா இப்போ..?” – இதுதான் இப்போதைய ஹாட் டாபிக்!

நிழல் யுத்தம், பண்ணை வீட்டுப் பட்டியல், மார்கழி ராசி என இலைக் கட்சிக்குள் நடக்கும் இந்த ‘உள்குத்து’ விவகாரம் எந்தப் பக்கம் போய் முடியப்போகிறது?