தமிழ்நாடா? தமிழகமா? என்ன சொல்லிக் கொடுக்க போகிறார் விஜய்?

தமிழ்நாடா? தமிழகமா? என்ன சொல்லிக் கொடுக்க போகிறார் விஜய்?

விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் என்ற பெயரே தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. வெற்றி கழகம் என்பதில் ’க்’ வர வேண்டும் என்று ஒரு சிலர் கூறிவரும் நிலையில் அரசியல் கட்சியின் பெயரே எழுத்துப்பிழையுடன் உள்ளது என்று சிலர் விமர்சனம் செய்து வருகின்றன.

இதுகூட பரவாயில்லை, கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று கூற வேண்டும் என்று கவர்னர் ஆர்.என் ரவி கூறியதை அடுத்து திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பொங்கி எழுந்தனர். தமிழ்நாடு என்று தான் சொல்ல வேண்டும் என்றும், தமிழகம் என்று சொல்லக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று வைத்துள்ளதையும் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு வெற்றிக் கழகம் என்றுதான் வைத்திருக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில் இயக்குனர் அமீர் இது குறித்து பேட்டி ஒன்றை கூறியிருப்பதாவது:

விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்க போகிறார் என்பதை அறிய ஆவலுடன் இருக்கிறேன். அவர் தமிழ்நாடு என்று சொல்லித் தர போகிறாரா இல்லை தமிழகம் என சொல்லித் தர போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியுள்ளார்.