நடிகர் விஜய் அவர்கள் த.வெ.க. (TVK) கட்சியைத் தொடங்கி, தனது பரப்புரைக்காகப் பல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு பேருந்தைத் தயாரித்து அதில் பயணம் செய்து வந்தார். பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தப் பேருந்தை தமிழகக் காவல்துறையினர் தற்போது கைப்பற்றி நிலுவையில் வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் த.வெ.க. தலைவர் விஜய்யை முழுமையாக முடக்குவது என்ற திட்டத்தை தி.மு.க. அரசு வகுத்துள்ளது என்பது தெளிவாகிறது.
கரூர் சம்பவத்தைக் காரணம் காட்டி, தமிழக அரசு தற்போது பல தடைகளை விதித்துள்ளதோடு, த.வெ.க. கட்சியை முடக்க முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தி.மு.க. அரசின் மீது மக்கள் மத்தியில் பெரும் வெறுப்பு உள்ள நிலையில், தாம் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை என்ற கருத்தும் மக்கள் மத்தியில் உள்ளது. எனவே, இந்தக் குறைபாடுகளைப் பற்றி மக்கள் சிந்திப்பதைத் தவிர்க்கும் நோக்கில், “பா.ஜ.க. தமிழ்நாட்டுக்குள் விஜய் மூலமாக வருகிறது” என்ற பரப்புரையை இந்த தி.மு.க. அரசு கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின், தனக்கு நெருக்கமான காவல்துறை அதிகாரிகளை விசாரணைக்கு நியமிப்பதும், தனக்கு நெருக்கமான நீதிபதியை த.வெ.க. வழக்கு விசாரணைக்கு நியமிப்பதும், மேலும் விசாரணை ஆணையக் குழுவில் கூட, தனக்கு நெருக்கமான முன்னாள் நீதிபதி ஒருவரை நியமித்துள்ளதும் தமிழக ஊடகங்களில் செய்திகளாக வெளிவருகின்றன. பெரும்பாலான ஊடகங்களில் விஜய் தொடர்பாக தற்போது அவதூறு பேசப்பட்டு வருகிறது. ஆனால், தி.மு.க. ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டது.
மக்கள் எதைப் பார்க்கிறார்கள்?
அதாவது, இந்த நவீன யுகத்தில் எத்தனை பேர் தான் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளைப் பார்க்கிறார்கள்? அனைவர் கைகளிலும் மொபைல் போன், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் உள்ளன. இவற்றின் மூலமே மக்கள் தகவல்களைப் பெறுகிறார்கள். இந்தச் சமூக ஊடகங்களில் எல்லாம் விஜய் அவர்களின் தொண்டர்கள் ஆதாரங்களை வெளியிட்டு வருவதால், பல மக்கள் உண்மை என்ன என்பதை அறியத் தொடங்கியுள்ளார்கள்.
வழக்கத்திற்கு மாறாக கரூர் கூட்டத்தில் விஜய் வந்த பிறகு, சுமார் 2,000 இளைஞர்கள் திடீரெனக் கூட்டத்தினுள் வந்து கலந்துகொண்டார்கள். “இவர்கள் யார்?” என்பதே மில்லியன் டாலர் கேள்வி. இவர்களால் தான் இந்த தள்ளுமுள்ளு மற்றும் நெரிசல் ஏற்பட்டுள்ளது என்றும், இரண்டு ஆம்புலன்ஸ்கள் அந்த வழியால் வந்ததும் இதற்கு ஒரு காரணம் என்றும் மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது. எனவே, பொதுமக்கள் அங்கே என்ன நடந்தது என்பதில் மிக மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள். ஆனால், பதற்றத்தில் தி.மு.க.தான் பல சதி வேலைகளைச் செய்து வருகிறது.