Posted in

தாமரை பக்கம் நகர்கிறதா TVK: ஜெயலலிதா சேலையை சட்ட சபையில் உருவிய தி.மு.க

ஆனானப்பட்ட ஜெயலலிதாவின் சேலையை சட்ட சபையில் வைத்து உருவி, அவர் தலை தலைமுடியை பிடித்து ஆட்டி யாரும் இதுவரை செய்யாத அளவு கேவலமாக நடந்து கொண்டது DKM கட்சி நிர்வாகிகள் தான். அவரை ஒரு பெண் என்று கூட திமுக வினர் பார்கவில்லை.  காரணம் உருப்பெற்று வரும் அரசியல் எதிரி என்று தான்:(மார்ச் மாதம் 25, 1989 இந்தச் சம்பவம் நிகழ்ந்தது பலர் அறிந்திருப்பார்கள்)

அதே போலத் தான் இன்று விஜய். என்ன தான் முதல்வர் ஸ்டாலின் விஜயைப் பற்றி பேசாமல் இருந்தாலும். தனக்கு விஜய் ஒரு பொருட்டே அல்ல என்று SHOW காட்டினாலும், முதல்வரின் பயமே விஜய் தான். அவர் சீமானையோ , EPSயையோ இல்லை தாமரையைக் கண்டு அஞ்சவில்லை. அவர் நடுக்கமே விஜயை பார்த்து தான். TVK க்கு உள்ள ஆதரவைப் பார்த்து தான்.

1989ல் வளர்ந்து வந்த ஜெயலலிதாவை, அரசியலில் இருந்து ஓடச் செய்ய என்ன செய்தார்களோ அதனை விட 10 மடங்கு படு கேவலமான அரசியலில் இறங்கியுள்ளார்கள் இந்த திமுகவினர். பிணம் மீது நின்று அரசியல் செய்து வருகிறார்கள். தமது குடும்ப ஆட்சியை நிலை நிறுத்த 41 பேர் அல்ல இன்னும் பல உயிர்களை குடிக்க கூட இந்த திமுக தயங்காது.

சீமான் பக்கம் செல்லாது, ADMK பக்கமும் சாயமல் இங்கே BJP பக்கமும் சாயாமல் தனித்து அரசியல் செய்து வந்தார் விஜய். ஆனால் இன்றைய சூழ் நிலையில் அண்ணாமலை எடுத்துள்ள பெரும் முயற்ச்சிகள் விஜயின் போக்கை மேல்ல மெல்ல மாற்ற ஆரம்பித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்துள்ளார்கள்.

டெல்லியில் இருந்து 8 பேர் கொண்ட MP குழு ஒன்றை தமிழகம் அழைத்து வந்து, கரூரில் நேரடியாக மக்களை சந்திக்க வைத்து, திருட்டு திமுக வின் முகத்திரையை கிழித்துள்ளார் அண்ணாமலை. இதனூடாக விஜய் அவர்கள் மீதும் TVK கட்சி மீதும் எந்த தவறும் இல்லை என்பது நிரூபனமாகியுள்ளது. திமுகவின் செந்தில் பாலாஜி, TV நேர்காணல் ஒன்றில் தனக்கு மிக நெருக்கமாக இருந்த சிலர், கரூர் TVK மாநாட்டுக்குச் சென்று பின்னர் காயமடைந்து வந்ததாக தாமே வாக்குமூலம் கொடுத்துள்ளார். திமுக உடன் பிறப்புகளுக்கு TVK மாநாட்டில் என்ன வேலை ? என்று கேட்க்க எந்த ஒரு பத்திரிகையாளருக்கும் துப்பில்லை !

இந்த நிலையில் முக்கிய கட்சி ஒன்றுடன் விஜய் கூட்டணி வைத்தால் மட்டுமே, இந்த Poison திமுக விடம் இருந்து தப்பிக்க முடியும் என்று, பலர் விஜய்க்கு அறிவுரை கூறியுள்ளார்கள். மத்தியில் ஆட்சி செய்யும் BJP கட்சி, இதனை முன்கூட்டியே கணித்துள்ளது. தமிழகத்தில் விஜய் கைதுசெய்யப்படக் கூடும் என்று கருதியதால் தான் விஜய் அவர்களுக்கு Z பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக காவல் துறை விஜயை கைது செய்ய முடியாது. மத்திய அரசின் அல்லது உள்துறை அமைச்சரின் ஒப்புதல் இருக்க வேண்டும். இந்த நிலையில் கொள்கை எதிரி என்று BJPயை குறிப்பிடும் விஜய் அவர்கள், தாமரையோடு இணைவாரா ? இல்லை தனித்தே நிற்க்க முற்படுவாரா என்று கேட்டால். விஜய் அவர்கள் தனித்து நிற்கவே விரும்புவார். ஏன் எனில் அவரை நீங்கள் திரையில் தான் பார்த்து இருக்கிறீர்கள். நிஜ வாழ்கையில் அவர் மிகவும், துணிச்சல் மிக்கவர். அசைக்க முடியாத தன்னம்பிக்கை கொண்டவர் என்பதில் சந்தேகமே இல்லை !

Loading