தி.மு.காவின் செம்பு தூக்கியாக மாறியுள்ள சீமான்: வேஷம் கலைந்தது !

தி.மு.காவின் செம்பு தூக்கியாக மாறியுள்ள சீமான்: வேஷம் கலைந்தது !

நாம் தமிழர் கட்சியை 2009க்கு பின்னர் நிறுவிய சீமான் அவர்கள், திமுக அரசே ஈழத் தமிழர்களை படுகொலை செய்தது என்றும், திராவிடர் இயக்கத்தை அழித்து தமிழர் என்ற அடையாளத்தை கொண்டுவர வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் இருப்பதாக மக்களிடையே பேசி, அரசியல் செய்து வந்தார். 10 ஆண்டுகள் பின்னர் ஈழத் தமிழர்களை மறந்து , தமிழக அரசியலை மட்டும் பார்த்து வந்த நிலையில். தற்போது திமுக செம்பு தூக்கியாக மாறி, தன்னைத் தானே அடையாளப்படுத்தி விட்டார்.

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த வேளை, அது விஜய் அவர்களால் நடந்த துயரச் சம்பவம் என்று கூறி திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல தற்போது சீமான் வெளியிடும் அனைத்து கருத்துக்களும், திமுகாவை வெளிப்படையாக ஆதரிப்பதை காட்டி நிற்கிறது. தமிழகத்தில் TVK கட்சியை முடக்க, திமுக வினர் கையில் எடுத்த ஆயுதம் கரூர் சம்பவம். TVK கட்சியை ஓரம் கட்டிய தமிழக அரசு, அதன் 2ம் கட்ட தலைவர்களை கைது செய்து TVK கட்சியை செயல் இழக்கச் செய்தது.

வேறு வழியில்லாமல் TVK கட்சித் தலைவர் விஜய் உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில். உச்ச நீதிமன்றம் பல சந்தேகங்களை கிளப்பி, CBI விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனை கடுமையாக எதிர்க்கும் சீமான், CBI விசாரணை தேவை இல்லை என்கிறார். ஆனால் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தவேளை, பல தடவை CBI விசாரணை தேவை என்று , பல தடவை கோரிக்கை விடுத்து இருந்தார். ஆனால் அந்த வேளைகளில் எதனையும் பேசாத சீமான், தற்போது மட்டும் பேசுவது ஏன் ? என்ற பெரும் கேள்விகள் எழுந்துள்ளது.

தமிழக உயர்  நீதிமன்ற நீதிபதி செந்தில் அவர்கள், DMK கட்சியின் ஒரு பங்காளி என்பது ஊர் அறிந்த விடையம். அவரை பகடைக் காய் ஆக்கி, விஜய் தொடர்பாக பல விமர்சனங்களை முன்வைக்க சொல்லியது திமுக. அவரும் பாவம் என்ன செய்வது, விஜய்க்கு “”தலைமைப் பண்பு கிடையாது””“”அவர் தப்பி ஓடி விட்டார்””, “”அவர் என்ன மாதிரியான ஒரு தலைவர்”” என்று எல்லாம் விமர்சிக்க. நீதிபதி இப்படிச் சொன்னார்…. அப்படிச் சொன்னார் என்று திமுக வின் பிரச்சார ஊடகங்கள் தொடர்ந்து 5 நாட்களாக இந்த விமர்சனங்களை போட்டு,  விஜய் அவர்கள் மேல் அவதூறு பரப்பியது.

விஜய் தரப்பு நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்தவேளை, எப்படி ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி இப்படி பல விமர்சனங்களை முன்வைக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது. அத்தோடு உச்ச நீதிமன்றம் விளக்கம் ஒன்றையும் கோரியுள்ளது. இந்த நிலையில் தமிழக IAS அதிகாரிகளை வைத்து திமுக அரசு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, அதில் விஜய் தான் குற்றவாளி என்று சொல்ல வைத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ள நிலையில்.

இந்த IAS அதிகாரிகளுக்கு விஜய் துரோகம் செய்து விட்டதாக சீமான் பேசியுள்ள விடையம், அவர் சுய நினைவில் தான் பேசுகிறாரா ? இல்லை சரக்கை அடித்து விட்டு போதையில் பேசுகிறாரா ? என்ற பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

மக்கள் மிகவும் தெளிவாக இந்த சம்பவத்தை புரிந்து வைத்துள்ளார்கள். இறந்து போன 41 பேரின் குடும்பத்தில் ஒரு குடும்பம் கூட விஜய் அவர்களை குற்றம் சாட்டவில்லை என்பது ஊர் அறிந்த விடையம். அதுபோக திமுக மாவட்ட செயலார்கள் 20 லட்சம் ரூபா தருகிறோம், ஒரு முறை TVல் பேட்டி கொடுங்கள் என்று, இந்த குடும்பத்தாரிடம் கெஞ்சியுள்ள விடையம் கூட வெளியாகியுள்ள நிலையில். எப்படி சீமான் திமுகாவுக்கு ஆதராவக பேசுகிறார் என்று அவர் தொண்டர்களே குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். என்ன அரசியல் இது ? இது ஆமைக் கறிக்கு மேலே இருக்கும் போல இருக்கே ?

Loading