Posted in

திருச்சியில் விஜயின் மைக்கை எலக்ரானிக் Jamer மூலம் ஜேம் செய்த ஸ்டாலின் அரசு

TVK தலைவர் விஜய் அவர்களின் மைக்கை, போலீசார் டார்கெட் செய்து, செயல் இழக்கச் செய்துள்ளார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் அவர்கள் நேற்றைய தினம் (13) திருச்சியில் பெரும் மக்கள் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தார். அவர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து, மரக்கடை என்னும் இடத்திற்கு வந்து அங்கே பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

அவர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து, சத்திரம் பஸ் நிலையத்திற்கு அருகே பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். விமான நிலையத்தில் இருந்து குறித்த இடத்திற்கு வர வெறும் 30 நிமிடங்கள் போதும். ஆனால் விஜய் இந்த இடத்தை அடைய சுமார் 5 மணி நேரம் பிடித்துள்ளது. இதற்கு காரணம் மக்கள் வெள்ளம் தான். அவரால் நகரவே முடியவில்லை. இதேவேளை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களும் திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கி வெளியே சென்றவேளை, அவரது காரும் அங்குலம் கூட நகர முடியாமல் திணறியுள்ளது. அவர் சுமார் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க, விஜய் அவர்கள் பேச ஆரம்பித்து, சரியாக தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி, அது எவை என்று சொல்லும் போது மட்டும் திடீரென அவரது மைக் கட் ஆகி விட்டது. இதனால் தி.மு.க. பற்றி விஜய் பேசியது யாருக்கும் கேட்கவில்லை. இதன் போது பலரது மொபைல் போனில் நெட்வொர்க் வேலை செய்யவில்லை. ஏன் இப்படி நடந்தது என்று ஆராய்ந்து பார்த்தவேளை, திருச்சி போலீசார் எலெக்ட்ரானிக் ஜாமர்களைப் பயன்படுத்தி, விஜய் பேசிய மைக்கை தொலைவில் இருந்து கட் பண்ணி உள்ளார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது.

தி.மு.க. அரசு விஜய்யை பார்த்து எந்த அளவு பயம் கொண்டுள்ளது என்பதனை இதை வைத்தே புரிந்து கொள்ள முடியும். விஜய் அரசியலுக்கு வந்த காரணத்தால், தற்போது உதயநிதியை களத்தில் இருந்து நீக்கியுள்ளது தி.மு.க. தலைமை. ஏன் எனில் உதயநிதிதான், தி.மு.க.வின் வருங்கால தலைவர். அவர் விஜய்யிடம் தோற்றுப் போனால் அது மிகப் பெரிய தவறாக மாறிவிடும். இதனால் தற்போது விஜய்யை எதிர்கொள்ள ஸ்டாலின் தான் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.

திருச்சி, அரியலூர், என்று கிராமம் கிராமமாக விஜய் சென்று பெரும் பரப்புரைகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டார். அதிலும் குறிப்பாக அரியலூர் பற்றி புட்டுப் புட்டு என்று வைத்த விஜய், அங்கே உள்ள மக்கள், அவர்கள் நிலவரம், என்ன செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார். இதனால் அரியலூர் தொகுதி தற்போது விஜய் பக்கம் சாய்ந்துள்ளது. திருச்சி தனது கோட்டை, அங்கே விஜய்யால் எதனையும் செய்ய முடியாது என்று சொன்ன கே.என். நேரு தற்போது தலையில் துண்டைப் போட்டு உட்காரும் நிலை தோன்றியுள்ளது.

Loading