கனடா செல்ல என வியட்நாமில் சிக்கி தற்போது தற்கொலை செய்த கிரிதரன் இவர் தான்

இந்த செய்தியை பகிர

கனடா செல்ல என பெரும் தொகைப் பணத்தை ஏஜன்சியிடம் கொடுத்து. பின்னர் வியட்நாம் கடலில் சிக்கிய ஈழத் தமிழர்கள் தொடர்பாக நாம் அறிந்து இருப்போம். இன்றும் 303 ஈழத் தமிழர்கள் வியட்நாம் முகாமில் தங்கி உள்ளார்கள். இன் நிலையில் 4 பிள்ளையின் தந்தையான, கிரிதரன்(37) தற்கொலை செய்துகொண்டார் என்ற துயரச் செய்தி வந்துள்ளது. யாழ் சாவகச் சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் அங்கே தங்கியுள்ள 302 ஈழத் தமிழர்களும் பெரும் மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். பணத்தை இழந்து குடும்பத்தை இழந்து இறுதியாக வேறு ஒரு நாட்டில் உள்ளார்கள். இவர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இதே நிலை நீடித்தால் மேலும் யார் யார் இந்த முடிவை எட்டுவார்களோ தெரியவில்லை. மேலும்..

பல பெண்களும் சிறுமிகளும் இதில் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம். முதலில் அவர்களை இலங்கைக்கு கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் ஒரு நாடு அவர்களை பாரம் எடுக்க வேண்டும். புலம்பெயர் வாழ் சட்டத்தரணிகள் இது தொடர்பாக கவனம் செலுத்துவது நல்லது.


இந்த செய்தியை பகிர