
நடிகர் விஜய் ‘லியோ’ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசைமைக்கிறார்.
இப்படத்தில் விஜய் உடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, ஜெயராம், அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும், சினேகா மற்றும் லைலா சுவாரசியமான வேடங்களில் நடிக்கின்றனர். வெங்கட் பிரபு ஸ்டைலில் நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்து உருவாகும் இப்படத்திற்கு இப்போதே ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
தளபதி விஜய் உடன் சேர்த்து இப்படத்தில் மொத்தம் 20 பேர் நடிக்கிறார்கள். சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்கத்தை கவனிக்க, வெங்கட் ராஜன் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்க, திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார். இனிமேல் அடுத்தடுத்து படத்தலைப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


