வாரிசு என்று பெயர் வைத்து உதயநிதியை பதம் பார்க்கும் விஜய்- படம் ரிலீஸ் ஆகுமா ? – athirvu news

வாரிசு என்று பெயர் வைத்து உதயநிதியை பதம் பார்க்கும் விஜய்- படம் ரிலீஸ் ஆகுமா ?

கோடிக் கணக்கில் தமிழில் வார்தைகள் கொட்டிக் கிடக்க, தலைப்புக்கு மட்டுமா குறைச்சல் இருக்கும் ? ஆனால் தனது படத்திற்கு “”வாரிசு””” என்று பெயர் வைத்தார் விஜய். உண்மையான அரசியல் வாரிசு விடுவாரா ? அன்றும் அப்படித் தான்… ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவேளை “”தலைவா””” என்ற படத்தில் நடித்தார். அது மட்டுமா ? அந்தப் படத்தில் “”Its Time to Leave”” என்ற வார்த்தையையும் பாவித்து இருந்தார். இதனால் தலைவி பொங்கி எழுந்தார். படம் கிடப்பில் போடப்பட்டது. பல கோடி செலவான தலைவா படத்தை கடைசி வரை வெளியிட முடியவில்லை என்ற நிலை தோன்றவே…

உடனே போய் ஜெயலலிதாவைப் சந்தித்தார் விஜய். அந்த வார்த்தையை நீக்குவதாக கூறி. அந்த வார்த்தையை சென்சார்  செய்து படத்தை போட, பின்னர் சம்மதித்தார் ஜெயலலிதா. தற்போது கலைஞர், MGR மற்றும் ஜெயலலிதா போன்ற பெரிய அரசியல் தலைவர்கள் இல்லை. வாரிசாக ஸ்டாலின், அவரது வாரிசாக உதயநிதி தான் உள்ளார்கள். ஸ்டாலினுக்கு பின்னர் தமிழகத்தில் பெரும் வெற்றிடம் ஒன்று நிச்சயம் தோன்றும்.

அந்த நேரத்தில் உதயநிதி தயாராக இல்லை என்றால், பாடு அம்பேல் தான். விஜய் அரசியலில் இறங்க பெரும் வாய்ப்புகள் உள்ளது. எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அளவு பெரிய ஒரு ரசிகர் மன்ற வட்டாரம்,  விஜய்க்கு உள்ளது. அது ரஜனி கமல் ஆகிய இருவரை விட பெரிய ரசிகர் மற்றம். எமது கணக்கு சரி என்றால், அது இயங்க ஆரம்பித்து விட்டது என்பது தான் அர்த்தம்.

ஏற்கனவே கவுன்சிலர் தேர்தலில் விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் போட்டியிட்டு பெரும் வெற்றியடைந்து உள்ளார்கள். இதே நிலை நீடித்தால் ஒரு காலத்தில் தமிழக முதல்வராக விஜய் வர வாய்ப்புகள் உள்ளது. அப்பா சந்திரசேகருக்கு தான் அரசியல் ஆசை உண்டு, எனக்கு இல்லை என்று விஜய் சொல்லித் திரிவது எல்லாமே, ஒரு நடிப்பு என்கிறார்கள் விடையம் தெரிந்தவர்கள். தற்போதும் வாரிசு படம் பெரும் சிக்கலில் உள்ளது. உதயநிதி, அஜித்தின் படத்தை வெளியிடுகிறார்.

அதனால் அனைத்து திரை அரங்குகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார் உதயநிதி. இதனால் விஜய் நடித்துள்ள வாரிசு ஊசாலாடிக் கொண்டு இருக்கிறது. ஆனால் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம்… ஏன் எனில்..ஒரு வேளை விஜய் நடித்த வாரிசு திரைப்படம் சூப்பர் கதையாக இருந்தால் அதுவே முன்நிலை வகிக்க கூடும். ஒட்டு மொத்தத்தில் உண்மையான அரசியல் வாரிசுடன் மோதும் படமாகவே வாரிசு உள்ளது. அடுத்து நடக்க உள்ள விடையம் எல்லாமே சுவாரசியமாகத் தான் இருக்கப் போகிறது பாருங்கள்.

 

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்