பிரபல சீரியல் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.
அதில் கல்லூரியில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்திருக்கிறார். அவர் கூறியதாவது, நான் கல்லூரியில் சேர்ந்து இரண்டாவது நாள் குடிநீர் அருந்தும் இடத்தில் நான் என்னுடைய தோழிகளுடன் நின்று கொண்டிருந்தேன்.
அப்போது அருகில் இருந்த வகுப்பு அறையில் இருந்து வந்த ஒரு மாணவர் அங்கு வந்தார். அவர் கையில் வாட்டர் பாட்டில் இல்லை.
அங்கு நின்று கொண்டிருந்த என்னிடம் உங்களுடைய வாட்டர் பாட்டில் கொடுங்கள் தண்ணீர் குடித்து விட்டு கொடுத்து விடுகிறேன் என கேட்டார்.
அப்போது நான், உங்களுக்கு தான்.. கை, கால் நல்லா இருக்குல்ல.. நடந்து போய் வாட்டர் பாட்டில் எடுத்து வந்து குடிங்க என்று கூறி விட்டேன்.
அதன்பிறகு, அந்த பையன் அவர்களுடைய நண்பர்களிடம் இந்த பொண்ணு ரொம்ப மோசமான பொண்ணு பயங்கர ரவுடித்தனமாக பேசுகிறது என்று என்னை பற்றி கூறி இருப்பார் போல் தெரிகிறது.
பிறகு ஒருநாள் அந்த வகுப்பு வழியாக நான் சென்ற பொழுது அந்த மாணவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு என்னை பற்றி ஏதோ கமெண்ட் பாஸ் செய்தார்.
நான் உடனே அவர்களிடம் சென்று என்ன சொன்னீங்க… என்ன சொன்னீங்களோ அதை அப்படியே என்னுடைய முகத்திற்கு முன்பு சொல்லுங்க பார்க்கலாம்.. என்று கேட்டேன் யாரும் வாயை திறக்கவில்லை.
எனவே, என்னிடம் ஆண்கள் பேசுவதற்கு பயப்படுவார்கள். எனக்கும் ஆண்களுக்கும் சுத்தமாக ஒத்துப் போகவே போகாது.
எனவே, எனக்கு ஆண் நண்பர்களை கிடையாது. எனக்கும் ஆண்களுக்கும் மிகப் பெரிய தூரம் இருக்கிறது. இப்படியான காரணங்களால் என்னை கண்டாலே ஆண்கள் பயப்படுவார்கள். என்னிடம் பேசுவதற்கும் தயங்குவார்கள் என கூறியிருக்கிறார் நிமேஷிகா ராதாகிருஷ்ணன்.