நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டி வச்சா ஜெயிக்குறது… கவனம் ஈர்க்கும் சூரியின் கருடன் பட கிளிம்ப்ஸ்!

நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டி வச்சா ஜெயிக்குறது… கவனம் ஈர்க்கும் சூரியின் கருடன் பட கிளிம்ப்ஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ஆக்கினார். அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார்.

விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களை முடித்த சூரி அடுத்து நடிக்கும் கருடன் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.. இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்துக்கு கருடன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகிக் கவனம் பெற்றுள்ளது. முதலாளிகள் போல உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் உட்கார்ந்திருக்க, அவர்களின் விஸ்வாசமான வேலைக்காரனாக சூரி அவர்களின் பின்னணியில் இருக்கிறார்.

பின்னணியில் “விஸ்வாசத்துல மனுஷங்களுக்கும் நாய்க்கும் போட்டி வந்தா எப்பவும் நாய் தான் ஜெயிக்கும். ஆனா அதே நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டி வந்தா ஜெயிக்கிறது என்னைக்குமே சொக்கன் தான்” என ஒலிக்க, சூரி ஒருவரை சேஸ் செய்து பிடிக்கும் ஸ்லோ மோஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மொத்த காட்சியும் ஒரு செங்கல் சூளை பின்னணியில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.