சூரி நடிக்கும் கருடன் படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழுவினர்!

சூரி நடிக்கும் கருடன் படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழுவினர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ஆக்கினார். அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார்.

விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களை முடித்த சூரி அடுத்து நடிக்கும் கருடன் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.. இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு கருடன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகிக் கவனம் பெற்றுள்ளது. முதலாளிகள் போல உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் உட்கார்ந்திருக்க, அவர்களின் விஸ்வாசமான வேலைக்காரனாக சூரி அவர்களின் பின்னணியில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த படம் மார்ச் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படும் நிலையில் இப்போது படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சூரி தொடங்கியுள்ளார். இது சம்மந்தமான வீடியோ அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.