
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட காலமாகப் பல்வேறு இடங்களில் செய்வினை இருப்பதாகக் கூறி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பெண் பூசாரி ஒருவர் மட்டக்களப்பு பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது மட்டக்களப்பு நகரில் உள்ள வீட்டுக்குச் பூசாரி வேடமணிந்து சென்ற குறித்த பெண் வீட்டில் சூனியம் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனைக் குறித்த காலத்தினுல் எடுக்காவிட்டால் குடும்பத்தில் பாரிய பிரச்சினைகள் உருவாகும் எனத் தெரிவித்ததையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளர் செய்வினையினை வெகுவாக எடுப்பதற்கு உடன்பட்டார்.
இதனையடுத்து ஒரு நாள் இரவுகுறித்த வீட்டுக்கு வந்த குறித்த பெண் பூசாரி தனது போலிப் பூசையினை ஆரம்பித்தார் இதன்போது பூசைக்குரிய பொருட்களுடன் ரூபா. 60,000 பணமும் தங்க ஆபரணங்களும் வெள்ளைத் துணியினால் கட்டி ஒரு தட்டில் வைக்க வேண்டும் எனக் தெரிவித்தார் இதனை நம்பிய வீட்டார் பூசாரி சொன்ன பொருட்களை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தனர், பின் அவற்றை எடுத்துக் குறித்த வீட்டின் சாமி அறைக்குள் சென்ற பெண் அங்குப் பூசை நடப்பதாகப் போலி நாடகம் நடத்தியுள்ளார், பின்னர் பூசைத் தட்டில் இருந்த பணத்தையும் நகையினையும் திருடிவிட்டு வெளியில் வந்து கதவைப் பூட்டிவிட்டு குறித்த வீட்டின் உரிமையாளர்களிடம் இந்தக் கதவு 10 நாட்களுக்குப் பூட்டி இருக்க வேண்டும் அதன் பின் தான் வந்து திறப்பதாகக் கூறிவிட்டு தலைமறைவாகினார். இதனையடுத்து நேற்று முன்தினம் குறித்த பெண் வராத காரணத்தினால் சந்தேகத்தில் கதவைத் திறந்து பார்த்போது குறித்த தட்டில் பணமும் நகையும் இருக்கவில்லை இதனையடுத்து பொலிஸில் முறையிட்டதற்கமைவாகத் தேடப்பட்டு வந்த குறித்த பெண் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.