சிவப்பு நிற உடையில் ரோஜா பூ போல ஜொலிக்கும் பிரபல நடிகை…

Spread the love

நடிகை ரகுல் பிரீத்சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷுட்ஸ்…

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்பவர் ரகுல் பிரீத்சிங். 2009 ல் “கில்லி” படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2012 ல் “தடையரா தாக்க” என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். 2013 ல் ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்து தெலுங்கில் ஹிட் கொடுத்தார்.

அதன் பின் தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த பிரீத்சிங் 2017 ல் ‘ஸ்பைடர்’ படத்தில் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். பின் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுடன் “அயலான்” படத்தில் நடித்துள்ளார். ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி கிளாமர் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தும் ரகுல் பிரீத்சிங் தற்போது சிவப்பு நிற மினுமினுக்கும் லெஹாங்காவில் அழகாக போட்டோஷுட் எடுத்து ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.